இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்


இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக உயர்வு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
x
தினத்தந்தி 23 March 2020 5:43 PM GMT (Updated: 23 March 2020 5:49 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுவரை உலக அளவில் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.  3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா தவிர்த்து, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் 467 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 471 ஆக உயர்ந்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தோற்றுவித்துள்ள, கொரோனா வைரசுக்கான தேசிய சிறப்பு படையானது, மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைடிராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து பொருளை வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்கு பரிந்துரை செய்தது. எனினும், மருத்துவர் அளிக்கும் பரிந்துரையின் பேரிலேயே சிகிச்சை அளிக்கப்பெற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Next Story