தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள் + "||" + Jharkhand centers in Jharkhand to cook for the poor

ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள்

ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள்
ஏழைகளுக்கு சமைத்து போட ஜார்கண்டில் 350 கிச்சடி மையங்கள் திறக்கப்பட உள்ளன.
ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில், 31-ந் தேதிவரை தனிமைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில், உணவுக்கு வழி இல்லாதவர்களுக்கு உணவு சமைத்து போடுவதற்காக, 350-க்கும் மேற்பட்ட கிச்சடி மையங்களை திறக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.


அத்துடன், 377 அரிசி-பருப்பு மையங்கள் ஏற்கனவே இயங்கி வருவதாக கூறியுள்ளது. வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜார்கண்ட் மாநில அரசு கூறியுள்ளது.