நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன


நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 23 March 2020 9:56 PM GMT (Updated: 23 March 2020 9:56 PM GMT)

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டன.

நாசிக்,

மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க இந்திய பாதுகாப்பு அச்சகம், கரன்சி நோட்டு அச்சகம் என 2 அச்சகங்கள் உள்ளன. இந்திய பாதுகாப்பு அச்சகத்தில், 1,900 ஊழியர்களும், கரன்சி நோட்டு அச்சகத்தில் 2 ஆயிரத்து 100 ஊழியர்களும் வேலை செய்கிறார்கள்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த அச்சகங்கள் 31-ந்தேதி வரை மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், அத்தியாவசிய பணி செய்பவர்கள் ஆகியோர் மட்டும் இந்த அச்சகங்களில் இருப்பார்கள் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story