தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள் + "||" + Kerala leads States in testing for coronavirus, Maharashtra in infections

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள் கேரளாவும் , மாராட்டிய மாநிலங்களாகும்.
திருவனந்தபுரம்

இந்தியாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் உள்ளது.

கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் சமீபத்தில் ஒரு அதிவேக கொரோனா வைரஸ் பரவலை கண்டிருக்கின்றன. இந்த மாநிலங்கள் ஒப்பீட்டளவில் அதிக சோதனை விகிதங்களைக் கொண்டுள்ளன. இதில் கேரளா மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. மராட்டிய மாநில புனே மாவட்டம் அதிக பாதிப்பு இல்லை என்று பதிவு செய்துள்ளது.

36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 23ந்தேதி குறைந்தது ஒரு பாதிப்பையாவது  பதிவு செய்துள்ளன.சோதனை செய்யப்பட்ட மாதிரிகளுக்கான தரவு சில மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. அவற்றில், கேரளா மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது, மேற்கு வங்கம் குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளை சோதனை நடத்தி உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கிடைத்த சமீபத்திய ஆனால் மதிப்பிடப்படாத தரவுகளின்படி, 87 மாவட்டங்களில் குறைந்தது ஒரு பாதிப்பாவது  பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாநிலங்கள்

சோதனை
நடத்தப்பட்டவர்கள்

தேதி

மக்கள் தொகையில்
சதவீதம்

கேரளா

4035

மார்ச் 22

11.38

கர்நாடகா

1387

மார்ச் 22

2.08

மராட்டியம்

1666

மார்ச் 22

1.37

தமிழ்நாடு

552

மார்ச் 23

0.72

குஜராத்

422

மார்ச் 23

0.65

ஆந்திரா

178

மார்ச் 23

0.33

மேற்குவங்காளம்

128

மார்ச் 22

0.13


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் 2500; இனி தான் வேகம் எடுக்கும்!! எச்சரிக்கை தேவை!!!
இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள்.
2. குவைத்தில் 24 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
குவைத்தில் இருக்கும் 24 இந்தியர்களுக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
3. புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர்
புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என தம்பதியினர் பெயரிட்டு உள்ளனர்
4. நாக்பூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு நடந்து வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு!
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து நண்பர்களுடன் தமிழகத்தை நோக்கி 500 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்த மாணவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
5. அமெரிக்கா தனது நாட்டினரை இந்தியாவில் இருந்து அனுப்ப தொடங்கியது - தூதரக அதிகாரி
நாடு திரும்ப விரும்பும் தனது நாட்டினரை திருப்பி அனுப்பத் தொடங்கியுள்ளதாக மூத்த அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.