தேசிய செய்திகள்

‘ஊரடங்கு’ உத்தரவை மீறி செயல்பட்ட குளிர்பான நிறுவனம் மீது வழக்கு + "||" + The beverage company has been sued for breaching the curfew.

‘ஊரடங்கு’ உத்தரவை மீறி செயல்பட்ட குளிர்பான நிறுவனம் மீது வழக்கு

‘ஊரடங்கு’ உத்தரவை மீறி செயல்பட்ட குளிர்பான நிறுவனம் மீது வழக்கு
‘ஊரடங்கு’ உத்தரவை மீறி செயல்பட்ட குளிர்பான நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை கலெக்டர் கே.சி.சாமன் பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை மீறி ஏதேனும் நிறுவனங்கள் செயல்படுகிறதா? என்று அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நளகார் பகுதியில் உள்ள ‘கோகோகோலா‘ தொழிற்சாலை, உத்தரவை மீறி செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


அதன்பேரில் அந்த நிறுவனம் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவிற்கு கீழ்படிய மறுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 188-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சட்டத்தின்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாத சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவால் அறுவடை செய்யாமல் காய்ந்து கிடக்கும் தர்பூசணிகள்
ஊரடங்கு உத்தரவால் நத்தக்காடையூர் பகுதி வயல்களில் அறுவடை செய்யப்படாமல் தர்பூசணி பழங்கள் காய்ந்து கிடக்கின்றன.
2. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன? விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி
ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர்.
3. ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
4. ஊரடங்கு உத்தரவை மீறியதாக ஒரேநாளில் 684 பேர் கைது: தேவையின்றி சுற்றிய இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார் - உறுதிமொழியும் ஏற்க வைத்தனர்
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சென்றதாக ஒரே நாளில் 684 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்தனர்.
5. ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும்- முதல்வர் பழனிசாமி
ஏப்ரல் 14-ந்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.