தேசிய செய்திகள்

பிறந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்: ஒற்றுமையின் சின்னம் என விளக்கம் + "||" + Parents who named their child a corona number: interpreted as a symbol of solidarity

பிறந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்: ஒற்றுமையின் சின்னம் என விளக்கம்

பிறந்த குழந்தைக்கு ‘கொரோனா’ என பெயர் சூட்டிய பெற்றோர்: ஒற்றுமையின் சின்னம் என விளக்கம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பிறந்த குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒற்றுமையின் சின்னம் என குழந்தையின் பெற்றோர் விளக்கம் அளித்தனர்.
கோரக்பூர்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று கடந்த 22-ந்தேதி இந்தியா முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவும் கடைப்பிடிக்கப்பட்டது.


இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் சோகவுரா என்ற கிராமத்தில் ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு பெற்றோரின் சம்மதத்துடன், குழந்தையின் மாமா நிதேஷ் திரிபாதி என்பவர் ‘கொரோனா’ என்று பெயர் சூட்டினார். உலகம் முழுவதும் வைரலான இந்த வைரசின் பெயரை கொண்ட குழந்தை, உத்தரபிரதேசம் முழுவதும் பிரபலம் ஆகி விட்டது.

குழந்தைக்கு ‘கொரோனா’ என்று அந்த கொலைகார வைரசின் பெயரையா சூட்டுவார்கள் என்று பலரும் திரிபாதியிடமும், குழந்தையின் பெற்றோரிடமும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர்கள், “கொரோனா வைரஸ் ஆபத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. அது ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்று வருகிறது. இருப்பினும், மக்களிடம் பல நல்ல பழக்கங்கள் ஏற்படுவதற்கு கொரோனா காரணமாக உள்ளது. கொரோனாவால் உலக மக்கள் ஒற்றுமையுடன் இருக்கின்றனர். இந்த குழந்தை மக்கள் ஒற்றுமையின் சின்னமாக, தீமைகளை எதிர்த்து போராடுபவளாக இருப்பாள்” என்று பதில் அளித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
2. இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு இந்திய டாக்டர் பலி
இங்கிலாந்தில், இந்திய இதய அறுவை சிகிச்சை நிபுணர், கொரோனா வைரசுக்கு பலியானார்.
3. உலக சுகாதார தினத்தில் கொரோனாவுக்கு எதிராக போராடும் “டாக்டர்களுக்கும், நர்சுகளுக்கும் நமது நன்றியை உறுதி செய்வோம்” - மோடி டுவிட்டர் பதிவு
உலக சுகாதார தினத்தில், கொரோனா வைரசுக்கு எதிராக முன்னிலையில் நின்று போராடுகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கு நமது நன்றியை உறுதி செய்வோம் என பிரதமர் மோடி செய்தி விடுத்துள்ளார்.
4. கொல்கத்தாவில் ‘கொரோனா’விடம் தப்பிய இரண்டு குழந்தைகள் - குணமடைந்து வீடு திரும்பினர்
கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் குழந்தைகள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினர்.
5. அமெரிக்காவில் பலி 10 ஆயிரத்தை நோக்கி செல்கிறது: “கொரோனாவுக்கு மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கம்” - டிரம்ப் புலம்பல்
கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சையில் மலேரியா மருந்தை முன்னரே பயன்படுத்தாதது வெட்கக்கேடானது என்று டிரம்ப் கூறினார்.