ராமர் சிலையை தற்காலிக கோவிலில் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபி முதல்வர்


ராமர் சிலையை தற்காலிக கோவிலில் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உபி முதல்வர்
x
தினத்தந்தி 25 March 2020 9:29 AM GMT (Updated: 25 March 2020 9:29 AM GMT)

ராமர் சிலையை தற்காலிக கோவிலில் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

லக்னோ

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்த நிலையில், கோவில் கட்டுமான பணிகளுக்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோவில் கட்டுவதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

அயோத்தி ராம ஜென்மபூமியில் பிரமாண்ட கோவிலுக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த பணிகள் நிறைவடையும் வரை அங்கிருக்கும் ராமர் சிலையை (ராம்லல்லா) பக்கத்தில் ஒரு தற்காலிக கோவில் கட்டி அதில் வைக்க முடிவு செய்யப்பட்டது

அதற்கான நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.நாடுமுழுவதும் நாட்கள் 21 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி நெறிமுறை மற்றும்  நாடு தழுவிய ஊரடங்கிற்கு இடையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று அதிகாலை ராமர் சிலையை மாற்றும் நிகழ்வில் பங்கேற்றார்.

ஆதித்யநாத்தின் நடவடிக்கை, கொரோனா பாதிப்பிற்கு  எதிரான ஒரு சமூக தொலைதூர இடைவெளின் நெறிமுறையின் ஒரு பகுதியாக மத நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் அவர் விடுத்த வேண்டுகோளுக்கு எதிரானது. கோவில் கட்டுமானத்திற்காக ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவிடம் ரூ.11 கோடி காசோலையையும் வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.

செவ்வாய்க்கிழமை வரை உத்தரபிரதேசத்தில் 37 கொரோனா பாதிப்புகள் உள்ளன.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் பகிர்ந்து கொண்ட வீடியோவில் ஆதித்யநாத் ராமர்சிலைக்கு முன்  பூசாரிகளுடன்  மந்திரங்களை முழக்கமிடுவதைக் காணலாம்.

சடங்கின் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள ஆதித்யநாத், “ஒரு பெரிய ராமர் கோவில் கட்டுமானத்தின் முதல் கட்டம் இன்று நிறைவடைந்தது, கடவுள் ராமர் ஒரு தார்பாலின் கூடாரத்திலிருந்து ஒரு புதிய இடத்திற்கு மாறிவிட்டார்”என கூறி உள்ளார்.

Next Story