விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் : நிர்மலா சீதாராமன்


விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும் :  நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 26 March 2020 8:24 AM GMT (Updated: 26 March 2020 8:33 AM GMT)

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ 

*ஊரடங்கு காலத்தில் ஏழைகள் யாரும் உணவில்லாமல் தவிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
* மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் காப்பீடு செய்யப்படும். 
*வீடுகள் தோறும் கூடுதலாக 3 மாதங்களுக்கு ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும். 

*80 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசியுடன், அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோ கோதுமை வழங்கப்படும்.
* 100 நாள் வேலை திட்டத்தின் கூடுதலாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 
*முறைசாரா தொழிலாளர்களுக்காக ரூ.2 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும் 

*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்
* விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்
* 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்

*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்
* இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்
* 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு
*உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும் .
*80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை 3 மாத்துக்கு கூடுதலாக வழங்கப்படும் 
*ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்

*வருங்கால வைப்பு நிதியின் 75 சதவீதம் அல்லது 3 மாத சம்பளத்தில், எது குறைவோ அதை முன் பணமாக எடுத்துக்கொள்ளலாம்.


Next Story