கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை


கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை
x
தினத்தந்தி 26 March 2020 1:02 PM GMT (Updated: 26 March 2020 1:02 PM GMT)

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு  எதிரான போராட்டத்திற்கு அரசு தயாராகி வரும் நிலையில், இந்திய ரயில்வே தனது ரெயில் கேபின்களையும், ரெயில் பெட்டிகளையும் கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் தனிமை வார்டுகளாகப் பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.

நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அனைத்து ரயில் சேவைகளும் ஏப்ரல் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ஐ.சி.யுகளாக பயன்படுத்த கரெயில் பெட்டிகள்  மற்றும் கேபின்களை வழங்குவதற்கான திட்டம் குறித்து  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ் பொது மேலாளர்கள் மற்றும் பிரதேச ரயில்வே மேலாளர்கள் இடையேயான புதன் கிழமை நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங்கில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வென்டிலேட்டர்கள், படுக்கைகள், தள்ளுவண்டிகள் போன்ற உபகரணங்களை உற்பத்தி செய்ய ரயில்வே பெட்டிகளை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தின் போது, கழிப்பறைகளைக் கொண்ட ரெயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்தவும் ஒரு திட்டம் குறித்து ஆலோசிக்கபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாபின் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை (ஆர்.சி.எஃப்) எல்.எச்.பி பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றும் வேலையை ஒப்படைத்துள்ளதாகவும், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி  தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) ரயில் 18 (இந்தியாவின் முதல் மின்சார அரை அதிவேக ரயில்) தயாரிப்பாளர்கள் வென்டிலேட்டர்களை உருவாக்க முயற்சித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

Next Story