மராட்டிய முதல் மந்திரி நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை ரூ.51 கோடி நிதியுதவி


மராட்டிய முதல் மந்திரி நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை ரூ.51 கோடி நிதியுதவி
x
தினத்தந்தி 27 March 2020 10:11 AM GMT (Updated: 27 March 2020 10:11 AM GMT)

கொரோனா எதிரொலியாக மராட்டிய முதல் மந்திரி நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை ரூ.51 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

புனே,

இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி வருகிறது.  இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694ல் இருந்து 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மராட்டியத்தில் 130 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 43ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு மத்திய ரிசர்வ் போலீசார் ரூ.33.81 கோடி நிதியுதவி வழங்கினர்.  இதற்காக அனைத்து போலீசாரும் ஒரு நாள் ஊதிய தொகையை வழங்குவது என ஒட்டுமொத்த ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டது.

பீகாரில் உள்ள மகாவீர் கோவில் அறக்கட்டளை அமைப்பு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியது.  வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் ரூ.100 கோடி வழங்கப்படும் என உறுதி அளித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக அதனை எதிர்கொள்ள, மராட்டிய முதல் மந்திரி நிவாரண நிதிக்கு ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அமைப்பு ரூ.51 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

Next Story