தேசிய செய்திகள்

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை + "||" + Indian doctor's achievement to control coronary disease

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை

கொரோனா நோயை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை இந்திய டாக்டர் சாதனை
கொரோனா நோயை கட்டுப்படுத்தக்கூடிய புதிய சிகிச்சை முறையை இந்திய டாக்டர் ஒருவர் கண்டு பிடித்து உள்ளார்.
பெங்களூரு

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 114 புதிய தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதுவரை 17 பேர் இறந்துள்ளனர், 873 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், பெங்களூரில் உள்ள ஒரு டாக்டர் கொரோனாவுக்கு ஒரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளார்.

கொரோனாவை குணமாக்க சிகிச்சை முறையை கண்டுபிடித்ததாக பெங்களூரு புற்றுநோய் நிபுணர் விஷால் ராவ் கூறியுள்ளார். இந்த வார இறுதிக்குள் இந்த சிகிச்சை பரிசோதனைக்கு தயாராக இருக்கும் என்று அவர் கூறி உள்ளார்.

நோயெதிர்ப்பு மண்டலம் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும், இதனால் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடுகிறது.இந்த மருந்து கொரோனா வைரஸின் "தடுப்பூசி" அல்ல, 

இது குறித்து டாக்டர் விஷால் ராவ் கூறி உள்ளதாவது:-

கொரோனா நோயாளிகளுக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். மேலும் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு இந்த வார இறுதிக்குள் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 



தொடர்புடைய செய்திகள்

1. நெல்லையில் உயரும் கொரோனா பாதிப்பு; 32 பேருக்கு உறுதி
நெல்லையில் 32 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. கொரோனா பாதிப்பு; மராட்டியத்தில் பலி எண்ணிக்கை 1,695 ஆக உயர்வு
நாட்டிலேயே கொரோனா பாதிப்புக்கு மிக அதிகளவாக மராட்டியத்தில் 1,695 பேர் பலியாகி உள்ளனர்.
3. கொரோனா பாதிப்பு; இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
4. கொரோனா அதிகம் பாதிப்பு: முதல் 10 நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றது
இந்தியாவில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
5. செங்கல்பட்டில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுதலாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.