இந்தியாவில் 918 பேருக்கு கொரோனா பாதிப்பு; தெலுங்கானாவில் முதல் உயிரிழப்பு


இந்தியாவில் 918 பேருக்கு கொரோனா பாதிப்பு; தெலுங்கானாவில் முதல் உயிரிழப்பு
x
தினத்தந்தி 28 March 2020 3:54 PM GMT (Updated: 28 March 2020 3:54 PM GMT)

இந்தியாவில் 918 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.  பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் 6 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

வங்காளதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிய பாதிப்பு எதுவும் இல்லை.  தொடர்ந்து பாதித்தோரின் எண்ணிக்கை 48 ஆக உள்ளது.  அவர்களில் 15 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த உத்தரவு வருகிற ஏப்ரல் 14ந்தேதி வரை அமலில் இருக்கும்.  கேரளாவில் 165 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று தெலுங்கானாவில் முதன்முறையாக ஒருவர் இன்று பலியாகி உள்ளார்.  6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 65 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 185 புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது.  இந்த எண்ணிக்கை 918 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story