ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்


ஸ்டேட் வங்கியில் வட்டி குறைப்பு: ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 29 March 2020 12:00 AM GMT (Updated: 28 March 2020 11:48 PM GMT)

பொதுத்துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கியில் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

மும்பை, 

ரிசர்வ் வங்கி கடந்த வெள்ளிக்கிழமை அன்று வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைத்தது. இதனால் ரெப்போ விகிதம் 0.75 சதவீதம் குறைந்து 4.40 சதவீதமாக குறைந்து இருக்கிறது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 0.90 சதவீதம் குறைந்து 4 சதவீதமாக உள்ளது. இதன் பலனை வங்கிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்பதால் வீடு, வாகன கடன் வட்டி விகிதங்களும் குறைய வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வெளிக்காரணிகள் சார்ந்த கடன் வட்டியையும், ரெப்போ ரேட் சார்ந்த கடன் வட்டியையும் 0.75 சதவீதம் குறைத்து இருக்கிறது. இதனையடுத்து இந்த இரண்டு வட்டி விகிதங்கள் முறையே 7.05 சதவீதமாகவும், 6.65 சதவீதமாகவும் குறைகிறது. இதே போன்று பல்வேறு சில்லரை மற்றும் மொத்த டெபாசிட் வட்டி விகிதங்களையும் இவ்வங்கி 0.20 சதவீதம் முதல் 1 சத வீதம் வரை குறைத்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் வரும் 1-ந் தேதி (புதன்கிழமை) அமலுக்கு வருகின்றன.

Next Story