தேசிய செய்திகள்

ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர் + "||" + Rajasthan: Another batch of 275 Indian citizens brought in from Iran,

ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்

ஈரானில் தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் வந்தனர்
ஈரானில் சிக்கி தவித்த 275 இந்தியர்கள் தனி விமானம் மூலம் ராஜஸ்தான் அழைத்து வரப்பட்டனர்.
ஜோத்பூர்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. ஈரானிலும் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது.  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச அளவிலான போக்குவரத்து முடங்கியுள்ளது.  இதன் காரணமாக, ஈரானில் சுமார் 600 இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. 

இதையடுத்து, மத்திய அரசின் ஏற்பாட்டின் படி கடந்த சில தினங்களுக்கு முன்பு 277 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம்  இந்தியா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் ராணுவ நலவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில், 2-வது கட்டமாக மேலும் 275 இந்தியர்கள் இன்று சிறப்பு விமானம் மூலம் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகருக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் முதற்கட்ட பரிசோதனைக்கு பிறகு, அங்குள்ள ராணுவ நலவாழ்வு முகாம் அழைத்து செல்லப்படுகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. ஈரானில் ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரானில் இன்று ஒரே நாளில் 2,102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஈரானில் போர் பயிற்சியின் போது விபரீதம்: கப்பலில் ஏவுகணை தாக்கி 19 வீரர்கள் பலி
ஈரானில் போர் பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக கப்பலில் ஏவுகணை தாக்கியதில் 19 வீரர்கள் பலியாகினர்.
3. ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது
ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1 லட்சத்தை கடந்துள்ளது.
4. ஈரானில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது
ஈரானில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது.
5. ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார் - டிரம்ப் சொல்கிறார்
ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.