தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன + "||" + Coronavirus Live Updates: 106 new cases, 6 deaths reported in 24 hours

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 106 புதிய பாதிப்புகள் - 6 இறப்புகள் பதிவாகியுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.
புதுடெல்லி: 

கொரானா பாதிப்பு எண்ணிக்கை 1039 ஆக உயர்ந்து உள்ளது. இன்று கடந்த 16 மணி நேரத்தில்  61 புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக  என்று சுகாதார அமைச்சகம் இன்று காலை தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்புக்கு 25 பேர் பலியாகி உள்ளனர். 87 பேர் குணமாகி விடு திரும்பி உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 106 புதிய பாதிப்புகள் மற்றும் 6 இறப்புகள் பதிவாகியுள்ளன என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.

மேற்கு வங்காளம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா, ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த மாநிலங்களில் இருந்து ஒவ்வொன்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. மராட்டியத்தில் 6, மத்தியப் பிரதேசம் 2, கர்நாடகா 3, குஜராத் 4, டெல்லி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

 மராட்டியத்தில்186 பேர்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகவும், அடுத்து கேரளாவில் 182 பாதிப்புகளும் உள்ளன.

கடந்த வாரம் 21 நாள் ஊரடங்கை அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கட்டுப்பாடுகளை மீறுவதாக இன்று எச்சரித்தார், அவ்வாறு செய்பவர்கள் "தங்கள் சொந்த வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள்" என்று கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பியதன் பின்னணியில் ஊரடங்கு  முடிவுக்கு பிரதமரும் மன்னிப்பு கேட்டார்,

"உங்கள் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்திய இந்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக ஏழை மக்கள். உங்களில் சிலர் என் மீது கோபப்படுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த போரில் வெற்றி பெற இந்த கடுமையான நடவடிக்கைகள் தேவை" என்று இன்று தனது மாதாந்திர வானொலி உரையான "மான் கி பாத்" உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார் .

டெல்லியில் உள்ள பல மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள் அதிக நெரிசலான பகுதிகளாக மாறியுள்ளது, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சிறப்புப் பேருந்துகளில் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உள்ள சொந்த ஊர்களுக்குத் திரும்பும் தொழிலாளர்களுக்கு அரசு நடத்தும் முகாம்களில் 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில், கடந்த சில நாட்களாக மாநிலத்திற்கு திரும்பிய 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை கண்டுபிடித்து, அவர்களை அரசு நடத்தும் முகாம்களில் தனிமைப்படுத்தவும், அவர்களின் உணவு மற்றும் பிற அன்றாட தேவைகளுக்கான ஏற்பாடுகளை உறுதி செய்யவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவால் டெல்லி உட்பட 90 க்கும் மேற்பட்ட நகரங்களில் காற்று மாசுபாடு குறைந்து உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தாக்கம் டெல்லியில் பி.எம் .2.5 (நுண் துகள்கள் மாசுபடுத்தும்) 30 சதவீதம் குறைந்துள்ளது. அகமதாபாத் மற்றும் புனேவில் 15 சதவீதம் குறைந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் மோசமான சுகாதார அமைப்புகளால் உருவான கொரோனா வைரஸ் சீனா குற்றச்சாட்டு
கொரோனா வைரஸால் உலகமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரசின் தீவிரம் மீண்டும் அதிகமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், வைரஸ் உருவான இடம் பற்றி சீனா மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும் - சீரம் இன்ஸ்டிடியூட்
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆய்வு: 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பிரதமர் மோடி பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து ஆய்வு நடத்த 3 நகரங்களுக்கு ஒரே நாளில் பயணம், ஒரு மணிநேரம் ஆய்வு மேற்கொண்டார் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
4. கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஒரு மணிநேரம் ஆய்வு - விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி ஒரு மணிநேரம் ஆய்வு செய்தார், விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
5. ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான ஸ்பூட்னிக் வி கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் தயாராகும்
மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்பூட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன.