தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி + "||" + About 85 people, possibly infected with #COVID19,

டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதி

டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர்  மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. 

இந்த நிலையில், டெல்லியில் நேற்று ஒரே நாள் இரவில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் லோக்நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லோக் நாயக் மருத்துவமனையில் தற்போது வரை 106 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  டெல்லியில் தற்போது வரை 49 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 2 பேர் பலியாகியுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்தது: சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. காய்கறி-பழங்களை தொட்டுப்பார்த்து வாங்காதீங்க-கொரோனா பீதி காரணமாக வியாபாரிகள் கண்டிப்பு
கொரோனா பீதி காரணமாக காய்கறி, பழங்களை தொட்டுப்பார்த்து பொதுமக்கள் வாங்கக்கூடாது என வியாபாரிகள் கண்டிப்புடன் சொல்லி விடுகிறார்கள்.
3. கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய அடுத்த வாரம் சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன குழு
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி ஆராய்ந்து அறிவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுனர் குழு அடுத்த வாரம் சீனா செல்கிறது.
4. கொரோனா தொற்றால் சென்னையில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்றால் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. இந்தியாவில் புதிய உச்சம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 22,771 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.