கொரோனா குறித்த வதந்தியும் அது குறித்த உலக சுகாதார அமைப்பின் பதிலும்


கொரோனா குறித்த வதந்தியும் அது குறித்த உலக சுகாதார அமைப்பின் பதிலும்
x
தினத்தந்தி 30 March 2020 11:16 AM GMT (Updated: 30 March 2020 11:16 AM GMT)

கொரோனாவை விட அதி வேகமாக பரவும் கொரோனா குறித்த வதந்தியும் அது குறித்த உலக சுகாதார அமைப்பின் பதிலும் வருமாறு:-

புதுடெல்லி


கொரோனாவை விட அதிக வேகமாக பரவி வருவது அது தொடர்பான வதந்திதான். கொரோனா தொடர்பான ஒவ்வொரு வதந்திக்கும் உலக சுகாதார அமைப்பு பதில் அளித்து வருகிறது.

 அப்படி பரவி வரும் செய்திகளில் ஒன்று தான் 10 வினாடி சுவாசத்தை நிறுத்தி வைக்கும் சோதனை. அதாவது, உங்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு குறைந்தபட்சம் 10 வினாடிகள் மூச்சை அப்படியே நிறுத்தி வைத்து பார்க்க வேண்டுமாம். உங்களால் 10 விநாடிகள் மூச்சை நிறுத்தி வைக்க முடியும், அதுவும் இருமலோ அல்லது கஷ்டம் இல்லாமல் இதை செய்யமுடியும் என்றால் உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வரவில்லை என்று அர்த்தம் என்ற வதந்தி. 

இந்நிலையில், 10 வினாடி சுவாசத்தை நிறுத்தி வைக்கும் சோதனை குறித்து உலக சுகாதார அமைப்பு  உண்மையை என்ன என்பதை வெளியிட்டுள்ளது. இது உண்மையா என்று கேட்டால்..... "இருமல் அல்லது அசவுகரியம் இல்லாமல் உங்கள் சுவாசத்தை 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் வைத்திருக்க முடியும் என்பது நீங்கள் கொரோனா வைரஸ் நோய் அல்லது வேறு எந்த நுரையீரல் நோயிலிருந்தும் விடுபட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. இந்த தகவல் பொய்யானது என தெரிவித்துள்ளது. 

இதை போன்றே மற்றொரு தகவல் தான், "ஆல்கஹால் குடிப்பதால் நம்மை கொரோனா தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம்" என்ற செய்தி. 

இதன் உண்மை என்ன..... உண்மை: ஆல்கஹால் குடிப்பது கொரோனாவில் இருந்து உங்களைப் பாதுகாக்காது மற்றும் அது மிகவும் ஆபத்தானது. அடிக்கடி அல்லது அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும்" என உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைப் பற்றிய சில உண்மையான தகவலை தெரிவித்துள்ளது.  

இது போல் வதந்தி கேள்விகளும் உலக சுகாதார அமைப்பின் பதில்களும்

கேள்வி: புதிய கொரோனா வைரஸ் (2019-nCoV) வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் வாழ முடியுமா?

பதில்: ஆம், கொரோனா (2019-nCoV) வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலை மற்றும் குளிர் மற்றும் வறண்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

கே: குடிநீர் தொண்டை புண் போக்குமா, இது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்குமா?

ப: ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு குடிநீர் முக்கியம் என்றாலும், இது கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்காது.

ஏ.எஃப்.பி செய்தி நிறுவன  அறிக்கையின்படி, இந்த கருத்து  பிலிப்பைன்ஸில் பரவலாக பகிரப்பட்டது, இது ஜப்பானில் மருத்துவர்கள் வழங்கிய சுகாதார ஆலோசனையாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டு இருந்தது.

கே: மது அருந்தினால் புதிய கொரோனா வைரஸை (2019-nCoV) தடுக்குமா?

ப: இல்லை, மது அருந்துவது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்காது.

கே: கொரோனா காற்றின் மூலம் பரவுமா?

ப:பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது, தும்மும் போது அல்லது பேசும்போது உருவாகும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா வைரஸ் முக்கியமாக பரவுகிறது.
என உலக சுகாதார அமைப்பு பதில் அளித்து உள்ளது.


Next Story