தேசிய செய்திகள்

பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை + "||" + Corona financial fraud in the name of the Prime Minister - Government Warning

பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை

பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் மோசடி - மத்திய அரசு எச்சரிக்கை
பிரதமர் பெயரில் கொரோனா நிதி பெறுவதில் நடைபெறும் மோசடி குறித்து மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி, 

யுனைட்டெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் அல்லது யுபிஐ என்று அழைக்கப்படும் டிஜிட்டல் வசதி வழியாக பணம் செலுத்தும் முறை தற்போது நாட்டில் பரவலாக உள்ளது. இந்த முறையில் ஒரு நபரின் யுபிஐ ஐடி இருந்தால் அவருடைய வங்கி கணக்கில் நேடியாக பணம் செலுத்தலாம். தற்போது சிலர் இதையும் தவறான முறையில் பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட துவங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் நாடு தழுவிய அளவில் கொரோனா நிவாரண நிதிக்காக பிரதம மந்திரி பெயரில் PM CA-R-ES FU-ND என்ற யுபிஐ கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பலரும் நேரடியாக நன்கொடை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முறைகேடான முறையில் PM CA-RE FU-ND என்ற பெயரில் போலி யுபிஐ கணக்கு ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது. யுபிஐ கணக்கு pm-c-a-res@sbi என்பதே சரியான யுபிஐ கணக்கு என்று மத்திய அரசு டுவிட்டர் மூலம் தெரிவித்து உள்ளது.

s என்ற ஒரு எழுத்தை மட்டும் தவிர்த்து pm-c-a-re@sbi என்று இருப்பது போலி கணக்கு என்றும், எனவே மக்கள் அனைவரும் கவனமாக செயல்பட வேண்டுமென்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கியில் இருந்து பேசுவதாக ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு எண்ணை கேட்டு பெண்ணிடம் ரூ.1¼ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,500 கோடி கொரோனா நிதி
இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.7,500 கோடி கொரோனா நிதி அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
3. உதவித்தொகை பெற்று தருவதாக விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மோசடி
விவசாயிகளிடம் ஆதார், வங்கி கணக்கு எண்ணை பெற்று மத்திய அரசின் உதவித்தொகை வாங்கி தருவதாக கூறி சிலர் மோசடி செய்வதால் விவசாயிகள் உஷாராக இருக்கும்படி வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.
4. புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? நாராயணசாமி தலைமையில் மே 2-ந் தேதி அமைச்சரவை கூடி முடிவு
புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? சில மாவட்டங்களில் தளர்வுகள் அனுமதிக்கப் படுமா? என்பதுபற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி இறுதி முடிவு எடுக்கிறது.
5. ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி - 3 பேர் கைது
ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா நிதி திரட்டுவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.