தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு; கேரளாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு + "||" + 68-year-old man dies of coronavirus in Kerala, second death in state: Govt

கொரோனா வைரஸ் பாதிப்பு; கேரளாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் பாதிப்பு; கேரளாவில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,

இந்தியாவில் மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக, கேரளாவில் தான் அதிக அளவு கொரோனா வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது. கேரளாவில் மட்டும் 202 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கேரளாவில் ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.  

இது குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால்  68-வயதான  முதியவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் டையலிசிஸ் சிகிச்சைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வந்தன.  

கடந்த 5 தினங்களாக முதியவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம், கேரளாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் இன்று புதிதாக 225 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி ஷைலஜா தெரிவித்துள்ளார்.
2. கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
3. கேரளாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் புதிதாக 211 பேருக்கு கொரோனா தொற்று
கேரளத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: முதல்-மந்திரி பினராயி விஜயன் தகவல்
கேரளாவில் மேலும் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
5. கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.