டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்


படம்:Hindustan Times
x
படம்:Hindustan Times
தினத்தந்தி 31 March 2020 12:52 PM GMT (Updated: 31 March 2020 1:14 PM GMT)

டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி

தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  கூட்டத்தில்  கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர்உயிரிழந்துள்ளனர். 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கரோனா அறிகுறிகளுடன் டெல்லியில் பல்வேறு 

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 
தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வெளி நாடுகளிலிருந்து வந்த மத போதகர்கள் தெலுங்கானா, பீகார், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய 

மாநிலங்களுக்கு சென்று மசூதிகளில் பல கூட்டங்களை நடத்தி உள்ளனர்.இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற சபையில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கையை மாநில அளவில் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு-510,அசாம் -281,உத்தரபிரதேசம் -156, மராட்டியம்-109, மத்தியபிரதேசம்-107, பீகார்-86, -மேற்குவங்காளம்73, தெலுங்கானா-55, ஜார்கண்ட்-46,உத்தரகாண்ட்-34,அரியானா-22,அந்தமான் நிகோபார்-21, ராஜஸ்தாந்19,இமாசலப்பிரதேசம்,கேரளா,ஓடிசாவில் தலா 15 , பஞ்சாப்-9 மேகலயா-5

மலேசியா (20), ஆப்கானிஸ்தான் (1), மியான்மர் (33), அல்ஜீரியா (1) ,டிஜிபவுட்டி (1), கிர்கிஸ்தான் (28), இந்தோனேசியா ,(78), தாய்லாந்து (7), இலங்கை (34), வங்காள தேசம் (19), இங்கிலாந்து (3), சிங்கப்பூர் (1), பிஜி (4), பிரான்ஸ் (1), குவைத் 
(1) ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் வந்துள்ளனர் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயை தடுக்க ஊரடங்கு உத்தரவின் போது விசா விதிகளை மீறியதற்காக  மத போதகர்களை தடுப்புப்பட்டியலில் வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் 
வெளியாகி உள்ளன. 

டெல்லியின் நிஜாமுதீன் தப்லிகி ஜமாஅத் கட்டிடம் ஒரு விடுதி போன்ற வளாகம், இந்த கட்டிடத்தில் ஆறு தளங்கள் உள்ளன, மேல் தளங்களில் 2,000 பேர் வரை தங்கலாம். அடித்தளமும் தரை தளங்களும் ஒரு சமையலறை மற்றும் 

பெரிய சாப்பாட்டுப் பகுதியைக் கொண்டுள்ளன.டெல்லியின் நிஜாமுதீன் தப்லிகி ஜமாத் இப்போது  கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக 
குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. தப்லிகி ஜமாஅத் என்பது ஒரு உலகளாவிய கல்வி மற்றும் மிஷனரி இயக்கமாகும், இதன் முதன்மை நோக்கம் எல்லா இடங்களிலும் உள்ள முஸ்லிம்களை மத ரீதியாக ஊக்குவிப்பதாகும்.

இது 1927 ஆம் ஆண்டில் டெல்லியில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அரியானாவின் மேவாட் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. இது தற்போது மேற்கு ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் இயங்கி வருகிறது.
இதை நிறுவியவர் இஸ்லாமிய அறிஞரும் ஆசிரியருமான மவுலானா முஹம்மது இலியாஸ்.

போதகர்களின் சிறிய குழுக்கள் ஒன்றிணைந்து அனைத்து சமூக அடுக்குகளிலும் உள்ள முஸ்லிம்களை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை நினைவூட்டுவதற்காகச் சென்று, மசூதி தொழுகைகளில் 
கலந்துகொள்ளவும், பிரசங்கங்களைக் கேட்கவும் ஊக்குவிக்கின்றன.

அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தெற்கு டெல்லி வட்டாரத்தில் உள்ள கட்டிடத்தில் வெளிநாட்டுப் பிரஜைகள் இருப்பதை இந்திய பாதுகாப்பு அமைப்பு  உறுதிப்படுத்தும் வரை டெல்லி அரசாங்கமும் மார்க்கஸில் நடவடிக்கைகள் 
குறித்து தெரியாமல் இருந்து உள்ளது.

Next Story