தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம் + "||" + Coronavirus Crisis: Modi Govt Assures No Shortage Of Medicines To Combat Covid-19 Outbreak

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு இந்தியாவில் மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, 

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தாலும்கூட, இந்தியாவில் அதன் பரவல் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகள் தட்டுப்பாடு இல்லை என்றும், இந்திய மருந்துகள் துறை தொடர்ந்து மருந்து வினியோகத்தை கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக பிரச்சினைகள் எழுகிறபோது பல்வேறு துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் துணையோடு தீர்வுகளையும் காண்கிறது எனவும் தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதில் இருந்து மருந்துகள் உற்பத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம் ஒரு அறிக்கையில் நேற்று உறுதி செய்துள்ளது.

தவிரவும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையமும் போதுமான அளவுக்கு மருந்துகளை தயாரித்து இருப்பு வைக்குமாறும் மருந்து உற்பத்தி நிறுவனங்களை அறிவுறுத்தி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு உலகின் மோசமான ஏழாவது நாடு இந்தியா
கொரோனா பாதிப்பில் இந்தியா இப்போது உலகின் மோசமான ஏழாவது நாடாக மாறியுள்ளது.
2. சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா
சீனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது.
3. இந்தியாவில் 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாக 8392 பேர் கொரோனாவால் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை ஒரு நாள் பாதிப்பில் மிக அதிக அளவாக 8392 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
5. சென்னை,திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்த திட்டம்?
சென்னை,திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 13 நகரங்களில் கடுமையான சட்டதிட்டங்களுடன் இரண்டு வாரங்களுக்கு 5-வது கட்ட ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.