டெல்லியில் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு; அரசு மருத்துவமனை மூடப்பட்டது


டெல்லியில்  மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு; அரசு மருத்துவமனை மூடப்பட்டது
x
தினத்தந்தி 1 April 2020 12:19 PM IST (Updated: 1 April 2020 12:19 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி டெல்லியில் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், டெல்லியில் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனை ஒன்று மூடப்பட்டுள்ளது. அந்த மருத்துவர் டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து, அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், பரிசோதனை மையங்கள், வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடம் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது, தொடர்ந்து, கிருமிநாசினிகள் மூலம் அந்த இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்திலிருந்து திரும்பிய உறவினர்கள் மூலம் அந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என டெல்லி புற்றுநோய் சிகிச்சை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, அந்த மருத்துவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

Next Story