ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் அம்மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது.
அமரவாதி,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. மாநில அளவில் மராட்டியத்தில் 335 பேரும், கேரளாவில் 265 பேரும், தமிழகத்தில் 234 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆந்திராவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் புதிதாக கொரோனோ தொற்று ஏற்பட்ட அனைவரும் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story