டெல்லி நிஜாமுதீன் கூட்டம் : 9 ஆயிரம் பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர்


டெல்லி நிஜாமுதீன் கூட்டம் : 9 ஆயிரம் பேரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைபடுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 2 April 2020 6:27 PM IST (Updated: 2 April 2020 6:27 PM IST)
t-max-icont-min-icon

டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்ட 9 ஆயிரம் பேரையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது

புதுடெல்லி

நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் கிட்டத்தட்ட 20 சதவீதம் தப்லிகி ஜமாத் கூட்டத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த சந்திப்புடன் தொடர்புடைய 19 பேர் வெவ்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளனர். தெலுங்கானா 9 உயிரிழப்புகளையும்,டெல்லி, 
மராட்டியம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகியவை தலா இரண்டு உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளன.

கிட்டத்தட்ட 9,000 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் 1306 பேர் வெளிநாட்டினர். இவர்களின் சோதனை முடிவுகள் மற்றும் நிஜாமுதீன் மசூதியில் கூட்டத்திற்கு பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்ட நபர்கள் சோதனை முடிவுகள் இன்னும் காத்திருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் சுமார் 9,000 தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் முதன்மை தொடர்புகள் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:-

டெல்லி நிஜாமுதீனில் சுமார் 250 வெளிநாட்டினர் உட்பட சுமார் 2000 பேர் இருந்தனர். அவர்களில் 1804 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர், மேலும் 302 கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்லீகி ஜமாத்  உறுப்பினர்களை அடையாளம் காண மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து உள்துறை அமைச்சகம் (எம்.எச்.ஏ) மேற்கொண்ட  முயற்சியின் பலனாக அவர்கள் கண்டறியப்பட்டனர் என்று அவர் கூறினார்.

இது குறித்து சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவ்து:-

டெல்லி வந்து சென்றவர்களில் 400 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.மேலும் பலருக்கு சோதனைகள் நடைபெற்று வருகிறது கொரோனா பாதிப்புகள் உயரக்கூடும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.

"தமிழ்நாட்டிலிருந்து 173 பேருக்கும், ராஜஸ்தானில் இருந்து 11 பேருக்கும், அந்தமான் நிக்கோபரைச் சேர்ந்த 9 பேருக்கும், டெல்லியைச் சேர்ந்த 47 பேருக்கும் ,தெலுங்கானாவிலிருந்து 33 பேருக்கும் ஆந்திராவைச் சேர்ந்த 67 பேருக்கும், அசாமில் 16 பேருக்கும்,  ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 22  பேருக்கும்,மற்றும் புதுச்சேரியிலிருந்து இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் முடிவுகள் வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறினார்.

Next Story