கொரோனா பாதிப்பு; ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகம்


கொரோனா பாதிப்பு; ஆரோக்கிய சேது என்ற  செயலி அறிமுகம்
x
தினத்தந்தி 3 April 2020 8:03 AM IST (Updated: 3 April 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவா் நிலை குறித்து அறியவும், அதிகாரிகளுக்கு மக்கள் தகவல் அளிக்கவும் ஆரோக்கியசேது என்ற புதிய  மொபைல் செயலியை (அப்ளிகேஷன்) மத்திய அரசு  அறிமுகம் செய்துள்ளது. 

இதுதொடா்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரி ஒருவா் கூறியதாவது:ஆரோக்கியசேது என்ற புதிய செயல் ஒவ்வொரு இந்தியரின் ஆரோக்கியம் மற்றும் நலத்துக்கானதாகும். இதன் மூலம் கொரோனா நோய்த் தொற்றால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்பதை பொதுமக்கள் அறியலாம். 

கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் வசிப்பிடத்தை மையமாகக் கொண்டு இந்த செயலியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆரோக்கிய சேது என்ற பெயரிலான செயலியை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்தபின்னர், ஜிபிஎஸ்-ஐ ஆன் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்தின் அருகே கொரோனா பாதித்தவர் பகுதி இருந்தால் சுட்டிக்காட்டும். மேலும், அருகில் உள்ள கொரோனா பாதிப்பு இடத்தின் தூரத்தையும் செயலி காட்டும்.

மேலும், கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து விலகியிருப்பது எப்படி என்ற குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. நமக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டால் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்டிருந்தால் கூட இந்த ஆப், நம் தரவுகளை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ளும். இருப்பினும், நமது தகவல்களை மூன்றாம் நபர்களால் பார்க்க முடியாது என இதன் தனியுரிமை கொள்கை உறுதி அளிக்கிறது.11 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி இந்தியா முழுவதும் பயன்படுத்தலாம். அரசு-தனியாா் கூட்டுமுயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த செயலி  கொரோனா தொற்றை உறுதியாக எதிா்த்துப் போராட பொதுமக்களை ஒன்றிணைக்கும்” என்றார். 


Next Story