உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த 172 பேரில், 42 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று உத்தர பிரதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உத்தர பிரதேசத்தில் ஏற்கனவே, 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை நிலை நாட்டும் பணியில் ஈடுபடும் காவல்துறையினரை தாக்கினால், அவர்கள் மீது தேசத்துரோக சட்டம் பாயும் என்று மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 1 ஆம் தேதி முசாபர் நகரில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களை போலீசார் கண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் வாசிகள் சிலர், போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஒரு காவல் ஆய்வாளர், காவலர் படுகாயம் அடைந்தது நினைவிருக்கலாம்.
Related Tags :
Next Story