இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி
மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 601 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கேரளா, மத்திய பிரதேசம், டெல்லியில், 58 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2902 ஆக உயர்ந்து உள்ளது.கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு அறுபத்தெட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,023 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்,தொடர்புடையவர்கள் 22,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து 183 பேர் குணமாகியுள்ளனர்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், 17 மாநிலங்களில் உள்ளனர் என கூறி உள்ளது.
Related Tags :
Next Story