தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு + "||" + COVID-19 cases in Maharashtra jump to 661; 26 new patients

மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மராட்டியத்தில் மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மும்பை,

மராட்டிய மாநிலத்தில்  மேலும் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 661 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். 

புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 26 பேரில், 17 பேர் புனேவைச்சேர்ந்தவர்கள் ஆவர்.  மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். 52 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. புதிதாக 2,361 பேருக்கு தொற்று உறுதி மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 361 பேருக்கு தொற்று உறுதியானது.
2. சுற்றுலா மந்திரிக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி: உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி தனிமைப்படுத்திக்கொண்டார்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலா மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், முதல்-மந்திரி திரிவேந்திர சிங்கும், 3 மந்திரிகளும் தனிமைப்படுத்திக்கொண்டனர்.
3. மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் புதிதாக 2,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 116 பேர் பலியாகியுள்ளனர்.
5. மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 105 பேர் பலி - 2,190 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 105 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை திடீர் வேகம் பிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 2,190 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.