தேசிய செய்திகள்

ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி + "||" + Decision on reopening schools, colleges on April 14: HRD minister

ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி

ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு: மனிதவள மேம்பாட்டு மந்திரி
ஏப்ரல் 14 அன்று பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என மனிதவள மேம்பாட்டு மந்திரி கூறி உள்ளார்.
புதுடெல்லி

ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு காலம் முடிவடையும் போது நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் நிலைமை குறித்து ஆய்வு செய்த பின்னரே கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு மந்திரி ரமேஷ் போக்ரியால்  தெரிவித்தார்.

நாட்டில் 21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று அரசாங்கத்திடம் இருந்து அறிகுறிகள் வந்துள்ளன.

இது குறித்துன்மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஏப்ரல் 14 க்கு அப்பால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டால் மாணவர்களுக்கு கல்வி இழப்பு ஏற்படாது என்பதை உறுதிபடுத்த அரசு தயாராக உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு, ஆசிரியர்கள் பாதுகாப்பு அரசாங்கத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஊரடங்கு நீக்கப்பட்டவுடன் நிலுவையில் உள்ள தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டை நடத்துவதற்கு ஒரு திட்டம் தயாராக உள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக வீடுகளில் திருட முடியாததால் நகை கடையில் கொள்ளையடித்தேன் என்று நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான ஆசாமி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
2. ஊரடங்கு உத்தரவால் களை இழந்து காணப்படும் மாமல்லபுரம் புராதன சின்னங்கள்
ஊரடங்கு உத்தரவு காரணமாக மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் களை இழந்து காணப்படுகின்றன.
3. ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் எனத் தகவல்
ஊரடங்கை நீட்டிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
4. ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர்
ஊரடங்கு உத்தரவால் தாய்க்கு இறுதி சடங்கு செய்ய வரமுடியாமல் தவித்த ராணுவ வீரர் செல்போனில் தாயாரின் உடலை பார்த்து கதறி துடித்தார்.
5. ஊரடங்கு உத்தரவு எதிரொலி: ராமேசுவரத்தில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக ராமேசுவரம் பகுதியில் சைக்கிள் ஓட்டுவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பழைய சைக்கிள்கள் திடீரென அதிக விலைக்கு விற்கப்படுகிறது.