தேசிய செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது- ப.சிதம்பரம் டுவிட் + "||" + India enters a crucial two week period today. So does the world

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது- ப.சிதம்பரம் டுவிட்

எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது-  ப.சிதம்பரம் டுவிட்
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;-  இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரசால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: ஐ.நா.சபை கணிப்பு
கொரோனா வைரஸ் தொற்று நோயால் உலக அளவிலான உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கணித்துள்ளார்.
2. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் கத்தாரில் வேலை இழந்து, சிக்கி தவிக்கும் தமிழர்கள் - தாயகம் அழைத்து வர குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கத்தாரில் வேலை இழந்து சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
3. கொரோனா பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தருவது நிறுத்தம்: உலக சுகாதார நிறுவனம் அதிரடி முடிவு
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தந்து சோதிப்பதை நிறுத்தி வைத்து உலக சுகாதார நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
4. கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை: அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை
கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதனை செய்ய அமெரிக்க நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
5. தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் மேலும் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.