இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 6 April 2020 9:41 AM IST (Updated: 6 April 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோல், கொரோனா பாதிப்பில் இருந்து 291 பேர் மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 693 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருக்கிறது.  மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 690- பேருக்கு கொரோனா தொற்றுள்ளது. அதேபோல், தமிழகத்தில்  571 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. 


Next Story