இருமல், சளி இருந்ததால் கொரோனா எனப்பயந்து இளைஞர் தற்கொலை


இருமல், சளி இருந்ததால் கொரோனா எனப்பயந்து இளைஞர் தற்கொலை
x
தினத்தந்தி 6 April 2020 11:46 AM IST (Updated: 6 April 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

இருமல், சளி இருந்ததால் கொரோனா எனப்பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

பண்டா,

உலக நாடுகளை ஒரு சேர கொரொனா அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைக்கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றுக்கு காய்ச்சல், இருமல், சளியே அறிகுறி என்பதால், இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் , தாமாகவே முன்வந்து மருத்துவர் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள  வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் பண்டா மாவட்டத்தில், இருமல், சளி இருந்த 35-வயதான இளைஞர் ஒருவர் தனக்கு கொரோனா இருக்குமோ? என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சகோதரர் கூறுகையில், “  சளி, இருமல் இருந்ததால், கடந்த சில நாட்களாகவே எனது சகோதரர் தனிமைப்படுத்திக்கொண்டு  இருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்” என்றார்.   இவ்விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story