கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா முன்மாதிரியாக விளங்குகிறது ; பிரதமர் மோடி


கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா முன்மாதிரியாக விளங்குகிறது ; பிரதமர் மோடி
x
தினத்தந்தி 6 April 2020 7:10 AM GMT (Updated: 6 April 2020 7:10 AM GMT)

கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக விளங்குகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் 40-வது தொடக்க தினமான இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-  பாஜக தொடக்க தினம் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில், இந்தியா மட்டும் அல்லாமல் உலகமே நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.  மனிதம் நெருக்கடியை சந்தித்து வருகிறது.  

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது.  அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். 

கொரோனாவை தடுப்பதில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை உலகமே பாராட்டி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகளை ஒருங்கிணைத்து மத்திய அரசு செயல்படுகிறது. இந்திய மக்கள் ஒன்றாக இணைந்து கொரோனா நோயைத் தோற்கடிப்பார்கள். ஊரடங்கின் போது,  பெரிய நாடான இந்தியாவில் மக்கள் காட்டிய முதிர்ச்சி தன்மை  முன்னெப்போதும் இல்லாதது. மக்கள் இந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று யாரும் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது. 

கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. ஆனால், இந்த போரில் நாம் சோர்வடையவோ, ஓய்வு பெறவோ கூடாது. நாம் வெற்றியாளராக வரவேண்டும். இந்தப்போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்” என்றார். 


Next Story