உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்க உயிரியல் பூங்கா ஆணையம் உத்தரவு
விலங்குகளை கண்காணிக்குமாறு நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் பராமரிக்கப்படும் விலங்குகளைக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
விலங்குகளிடம் ஏதேனும் அசாதாரண நடவடிக்கைகள் இருக்கிறதா? அல்லது ஏதேனும் அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை 24 மணி நேரமும் சிசிடிவி மூலமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story