கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போரில் நாம் சோர்வடையவோ, ஓய்வு பெறவோ கூடாது - பிரதமர் மோடி
கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. நாம் சோர்வடையவோ, ஓய்வு பெறவோ கூடாது என தொண்டர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் வித்துள்ளார்.
புதுடெல்லி
பாரதீய ஜனதா கட்சியின் 40-வது தொடக்க தின விழாவில் இன்று அக்கட்சி தொண்டர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் வாயிலாகப் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் இந்தியா வேகமாக பணியாற்றுகிறது. கொரோனாவுக்கு எதிரான பணியில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறையை உலக சுகாதார நிறுவனமே பாராட்டுகிறது. அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்தியாவில் ஊரடங்கை மக்கள் தீவிரமாக கடைபிடிப்பார்கள் என்று யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.
கொரோனாவுக்கு எதிரான நீண்ட காலப் போர் இது. ஆனால், இந்த போரில் நாம் சோர்வடையவோ, ஓய்வு கூடாது. நாம் வெற்றியாளராக வரவேண்டும். இந்தப்போரில் வெல்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்”
வீட்டைவிட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணியுங்கள் . வீட்டில் இருக்கும் போதும் முகத்தை மூடிக்கொள்வது அவசியம் என கூறினார்.
Related Tags :
Next Story