ஊரடங்கு நீட்டிக்கப்படாது பிரதமர் சூசக தகவல்?
ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்பதை பிரதமர் மோடி முதல அமைச்சர்கள் கூட்டத்தில் மறைமுகமாக தெரிவித்தார்.
புதுடெல்லி
கொரோனா ஊரடங்கு முடிவடையும் போது ஒட்டுமொத்த மக்களும் ஒரே நேரத்தில் வெளியே வராமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையில் ஒரு பொதுவான வெளியேறும் உத்தியை கையாள வேண்டும் என்பது குறித்து பேச பிரதமர் மோடி முதல்-அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர்களிடம் பேசிய அவர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இந்த முன்மொழிவு குறித்து அவர்களின் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார், என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்பதற்கான ஒரு அறிகுறியாக மோடியின் முன்மொழிவு காணப்பட்டது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சமூக விலகல் ஊரடங்கு காலம் முடிந்ததும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு மாநில அரசு அதிகாரி கூறினார். “மேலும், ஊரடங்கு முடிந்ததும் மக்கள் வெளியே வரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த வேண்டியது மாநிலங்கள் ஆகும்.
இது வழக்கம் போல் வணிகமாக இருக்க முடியாது. அதனால்தான் வெளியேறும் விவகாரத்தில் மாநிலங்கள் தங்கள் ஆலோசனையை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டு இருந்தார்.
21 நாட்கள் ஊரடங்கு வீணாகாது. ஊரடங்கிற்கு பிறகும், முகமூடி அணிவது, தூய்மை, சமூக விலகல் போன்ற கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள். பொறுப்பாக இருப்பது உங்களை காப்பாற்றும்: பிரதமர், ”என்று அருணாச்சல பிரதேச முதல்வர் கூட்டத்திற்குப் பிறகு டுவீட் செய்துள்ளார்.
Related Tags :
Next Story