கொரோனா பரவல்; ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை: மத்திய அரசு தகவல்
கொரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14க்கு பின்பும் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளன என மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமுடன் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் அமலில் உள்ளது. இந்த உத்தரவு கடந்த 24ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல தடை விதிக்கப்படுகிறது.
எனினும், நோய்க்கிருமி பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நாட்டில் கொரோனா பாதித்தோரில் அதிக எண்ணிக்கையுடன் மராட்டியம் முதல் இடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து டெல்லி மற்றும் கேரளா இந்த வரிசையில் உள்ளன.
இந்த நிலையில், கொரோனா பரவல் எதிரொலியாக ஏப்ரல் 14க்கு பின்பும் ஊரடங்கை நீட்டிக்க பல மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து உள்ளன என மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது.
நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது என கூறப்படுகிறது.
Related Tags :
Next Story