தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி + "||" + Mukhtar Abbas Naqvi appeals to Muslims to strictly follow lockdown guidelines on Shab-e-Barat

ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி

ஊரடங்கை மீறி இன்று இரவு முஸ்லீம்கள் வெளியேவர வேண்டாம்- மத்திய மந்திரி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 773 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இன்று ஊரடங்கை மீறி முஸ்லீம்கள் இரவு வெளியே வரவேண்டாம் என மத்திய மந்திரி கோரிக்கை வைத்துள்ளார் .
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5194 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 773 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றுடைய 35 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடங்கிய பின் ஒரே நாளில் அதிகபட்சம் மரணம் நடந்தது கடந்த 24மணிநேரத்தில் தான்.தற்போது இந்தியவில், அதிகபட்சமாக மகாராஷ்ராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1018ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 690பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இரண்டாவது அதிக எண்ணிக்கையில் உள்ளது.இது மேலும், அதிகரிக்க கூடதென மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இன்று முஸ்லிம்களால் மன்னிப்பின் இரவாக அனுசரிக்கபடும்விராத் எனப்படும்  ஷபே பாராஅத் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி இஸ்லாமியர்கள் வெளியே வரவேண்டாம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல அலிகர் தலைமை உலாமாவும் யாரும் பள்ளிவாசலில் கூட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
2. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
கடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
4. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.
5. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.