மருந்து ஏற்றுமதி விவகாரம் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியக்கூடாது - மோடிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்


மருந்து ஏற்றுமதி விவகாரம் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியக்கூடாது - மோடிக்கு காங்கிரஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 April 2020 4:41 AM IST (Updated: 9 April 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

மருந்து ஏற்றுமதி விவகாரத்தில் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியக்கூடாது என்று மோடிக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மருந்துகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அச்சுறுத்தலே காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நேற்று காணொலி காட்சி மூலம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

இந்தியா, வேறு நாடுகளின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து பழக்கப்பட்டது அல்ல. எனவே, அச்சுறுத்தல் காரணமாகவோ, அச்சத்தின் காரணமாகவோ மருந்து ஏற்றுமதி செய்ய பிரதமர் மோடி எந்த முடிவும் எடுக்கக்கூடாது. அது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும். வரலாறு நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கும், அதன் 130 கோடி மக்களுக்கும்தான் மோடி முன்னுரிமை அளிக்கவேண்டும். மற்றதெல்லாம் அதற்கு பிறகுதான். மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் மோடி எடுக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story