மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழப்பு


மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 9 April 2020 12:01 PM IST (Updated: 9 April 2020 12:01 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

இந்தூர், 

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆக உள்ளது.  

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பால் மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தூர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.  மத்திய பிரதேசத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.  மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 213 ஆக உள்ளது. 


Next Story