புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 7 ஆக உயர்வு


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 7 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 April 2020 11:05 AM IST (Updated: 10 April 2020 11:35 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இன்று 7 ஆக உயர்ந்து உள்ளது.

புதுச்சேரி,

புதுவை அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்கள் வசித்து வந்த சொர்ணா நகர் மற்றவர்கள் நுழைய முடியாதபடி சீல் வைக்கப்பட்டது. அதேபோல் அரியாங்குப்பம் மேற்கு கொம்யூன் பஞ்சாயத்து முழுவதும் முக்கிய சாலைகள் மூடப்பட்டு மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டது..

இதனால் அந்த பகுதியை சேர்ந்த யாரும் வெளியே வர முடியாதபடி அனைத்து இணைப்பு சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி அந்த பகுதியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு பஞ்சாயத்து முழுவதும் தினமும் 2 முறை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  தொடர்ந்து 10 நாட்களாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்பின்னர் கடந்த 2ந்தேதி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  ஒருவர் குணமடைந்து உள்ளார்.

புதுச்சேரியில் நேற்றுவரை 5 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில், இன்று 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  அவர்கள் 2 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரும் புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு இன்று 7 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story