பஞ்சாபில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
பஞ்சாபில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அமிர்தசரஸ்,
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும், நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டு உள்ளனர். எனவே அதுபற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், பஞ்சாபில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாபில் இதுவரை 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 4 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே, ஒடிசா அரசு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story