ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை- மத்திய சுகாதாரத்துறை


ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை- மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 10 April 2020 2:10 PM GMT (Updated: 2020-04-10T19:40:05+05:30)

ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவினால் 33 பேர் உயிரிழந்து உள்ளனர். 678 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது.

நாட்டில் 146 அரசு பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 67 தனியார் பரிசோதனை மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 3.28 கோடி எண்ணிக்கையிலான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இருப்பு உள்ளது.

இந்தியாவில் கொரோனா சமூக பரவல் என்ற நிலையை  எட்டவில்லை. மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம், இரண்டாம் நிலைக்கும், மூன்றாம் நிலைக்கும் இடையே நாம் இருக்கிறோம். மூன்றாவது நிலை என்பது தான் சமூக பரவல். ஆனால் தற்போது வரை மூன்றாவது கட்டத்தை நாம் எட்டவில்லை. இருந்தாலும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கூறினார்.


Next Story