மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,574 ஆக உயர்வு


மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,574 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 April 2020 9:25 PM IST (Updated: 10 April 2020 9:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,574 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா பாதித்த மாநிலங்களில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 229 பேர் கொடிய கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை சராசரியாக 100 என இருந்த நிலையில், நேற்று புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 200-ஐ கடந்தது, மராட்டிய மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், 2-வது நாளாக மராட்டிய மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் புதிதாக 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மும்பையில் இன்று மட்டும் 132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஒட்டு மொத்தமாக  மராட்டிய மாநிலத்தில்  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,574ஆக அதிகரித்தது. மும்பையில் தீவிரமாக கொரோனா பரவி வருவதால், இங்கு 381 பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.


Next Story