கொரோனா தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்; பிரதமர் மோடி


கொரோனா தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்;  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 11 April 2020 2:48 PM IST (Updated: 11 April 2020 3:07 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் கடந்த 25 ஆம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இன்றோடு 18 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, 7447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்றில் இருந்து 643 பேர் மீண்டுள்ள நிலையில், 239 பேர் உயிரிழந்துள்ளனர். 

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எப்போது தளர்த்துவது என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.  இந்த ஆலோசனையின் போது மாநில முதல் மந்திரிகளுடன் பேசிய பிரதமர் மோடி, “ கொரோனா விவகாரம் தொடர்பாக அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம்.  கொரோனா குறித்து பரிந்துரைகளை வழங்கலாம். நாம் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக நிற்க வேண்டும்”  இவ்வாறு கூறினார்.

Next Story