ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக கெஜ்ரிவால் டுவிட்


ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளதாக  கெஜ்ரிவால் டுவிட்
x
தினத்தந்தி 11 April 2020 3:55 PM IST (Updated: 11 April 2020 3:55 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கை நீட்டிப்பது என பிரதமர் மோடி முடிவெடுத்துள்ளார் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 14 ஆம் தேதியுடன் 21 நாள் ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதனால், ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. 

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது பல்வேறு மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகச் சூசகமாகத் தெரிவித்துள்ளார். 

இது குறித்து கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: - “ ஊரடங்கை நீட்டிப்பது என்ற சரியான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார்.  ஊரடங்கை முன்கூட்டியே நாம் அமல்படுத்தியதால், பல வளர்ந்த நாடுகளை விட இந்தியாவின் நிலைமை சிறப்பாக உள்ளது. ஊரடங்கு இப்போது நிறுத்தப்பட்டால், இது வரை எடுத்த நடவடிக்கை வீணாகி விடும். எனவே, ஊரடங்கை நீட்டிப்பது அவசியமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

Next Story