உத்தரபிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட புதுமாப்பிள்ளை தற்கொலை
உத்தரபிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிந்திரியா கிராமத்தை சேர்ந்தவர் ஆஷு (வயது 21). இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.
இந்தநிலையில் சண்டிகாரில் வேலை செய்து வந்த ஆஷு, ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார். இதனால் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்பேரில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த ஆஷு நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவரவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story