மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக உயர்வு


மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 April 2020 1:26 PM IST (Updated: 12 April 2020 1:26 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,895 ஆக உயர்ந்து உள்ளது.

புனே,

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமுடன் செயலாற்றி வருகின்றன.

நாட்டிலேயே மராட்டியம்தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இங்கு நேற்றுவரை 1,666 பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். 110 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மராட்டியத்தில் இன்று 134 பேருக்கு புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன.  இவர்களில் மும்பை நகரில் 113, மீரா பயாந்தர் 7, புனே நகரில் 4, நவி மும்பை, தானே மற்றும் வசாய் விரார் பகுதிகளில் தலா 2, ராய்காட் அமராவதி, பிவாண்டி, பிம்ப்ரி-சின்ச்வாத் பகுதிகளில் தலா 1 என பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  மராட்டியத்தில் இதுவரை 1,895 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இந்த தகவலை மராட்டிய சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

Next Story