மராட்டியத்தில் மேலும் 221 பேருக்கு கொரோனா பாதிப்பு


மராட்டியத்தில் மேலும் 221 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 April 2020 9:37 PM IST (Updated: 12 April 2020 9:37 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் மேலும் 221 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,982 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

நாட்டில் கொரோனா பாதித்த மாநிலங்களில் மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.  இன்று ஒரே நாளில் மட்டும் 221 பேர் கொடிய கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். மராட்டியத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,982 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பால் மராட்டியத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று பலியான 22 பேரில், 15 பேர் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், ஆறு பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் மீதமுள்ளவர்கள் 40-வயதுக்கும் கீழானவர்கள் என்றும் மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த 22 பேரில் 20 பேருக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா மற்றும் இதய நோய் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்ததாகவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. 

Next Story