கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலை- ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் பொருளாதார பாதிப்பால் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகப்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி:
கொரோனாவைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கபட்டு உள்ளது. இதனால் கடந்த மாதம் இந்தியாவில் பெரும்பாலான வணிகங்கள் மற்றும் நிதி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஊரடங்கால் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை உருவாகும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் இந்தியா வெறும் 1.5-2.8 சதவீத வளர்ச்சியைக் காணும் என்று உலக வங்கி கணித்துள்ளது - இப்போது முடிவடைந்த ஆண்டிற்கான 4.8-5.0 சதவீதத்திலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான சர்வதேச நாணய நிதியம் உலகளாவிய மந்தநிலை குறித்து எச்சரித்தது, மேலும் இந்த தொற்றுநோய் கடந்த நூற்றாண்டில் இருந்ததைப் போலல்லாமல் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகவும் கூறி உள்ளது.
இந்த் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது என்றும், கார்ப்பரேட்டுகள் மற்றும் வெளிநாட்டு கையபடுத்துவத்தில் இருந்துபாதுகாக்கப்பட வேண்டும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி என்று கூறி உள்ளார்.
இது குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
பெரிய அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாக பல இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கான கவர்ச்சிகரமான இலக்குகளாக மாறி உள்ளது. தேசிய நெருக்கடியின் இந்த நேரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் எந்தவொரு இந்திய நிறுவனத்தையும் கட்டுப்படுத்த அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது" என்று அவர் கூறி உள்ளார்.
The massive economic slowdown has weakened many Indian corporates making them attractive targets for takeovers. The Govt must not allow foreign interests to take control of any Indian corporate at this time of national crisis.
— Rahul Gandhi (@RahulGandhi) April 12, 2020
பீப்பிள்ஸ் பாங்க் ஆப் சீனா (பிபிஓசி) அடமானக் கடன் வழங்கும் பெரிய வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (எச்.டி.எஃப்.சி) 1.01 சதவீத பங்குகளை வாங்கிய ஒரு நாளில் ராகுல்காந்தியின் இந்த கருத்து வெளியாகி உள்ளது மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் சீனாவின் மத்திய வங்கி எச்.டி.எஃப்.சி.யில் கிட்டத்தட்ட 1.75 கோடி பங்குகளை வாங்கியுள்ளது.
Related Tags :
Next Story